திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2019 (18:43 IST)

கோமாளிக்காக காரை பரிசளித்த தயாரிப்பாளர்! – இயக்குனர் நெகிழ்ச்சி

ஜெயம் ரவி நடித்து ஹிட் அடித்த கோமாளி படத்தின் வெற்றியை சிறப்பிக்கும் வகையில் கார் பரிசு வழங்கியிருக்கிறார் தயாரிப்பாளர்.

பட தயாரிப்பாளர் அசரி கணேஷின் வேல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த படம் கோமாளி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கினார். கடந்த ஆகஸ்டு 15 அன்று வெளியான கோமாளி வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது.

இதனை சிறப்பிக்கும் விதமாக அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் பிரதீப்புக்கு புதிய ஹோண்டா கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதை தனது வேல் பிலிம்ஸ் ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். கார் வழங்கிய நிகழ்வின் போது நடிகர் ஜெயம் ரவியும் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.