திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : சனி, 21 செப்டம்பர் 2019 (17:24 IST)

இதைத்தான் அவன் வந்த நாளில் இருந்து பண்ணிட்டு இருக்கான் .. இப்போ என்ன புதுசா..?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் வழக்கம் போலவே கமல் கவினை வெளுத்து கட்டுகிறார். 


 
சாண்டிக்கும், கவினுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை பஞ்சாயத்தாக எடுத்து கமல் பேசுகிறார்.  அதாவது" நீங்க டாஸ்கை டாஸ்க்கா பார்த்தீங்களா கவின் ? இல்ல அதையும் தாண்டி... என நக்கலாக கமல் கேட்க உடனே அந்த அரங்கமே சிரிப்பு சத்தத்தால் அதிர்கிறது. பின்னர் கவின் பரஸ்ட் முகினும், லொஸ்லியாவும் கூட லைட்டா இடிச்சுக்கிட்டாங்க...ஆனால் சாண்டி லொஸ்லியாவுடன் இடிச்சு விழும் போது தான் இன்னும் கொஞ்சம் என்ன மீறி எமோஷ்னல் ஆகிட்டேன் என கூறி மழுப்பினர். உடனே கமல் குறுக்கிட்டு ஆனால் , தர்ஷன் கையில் அடிப்பட்டபோது அந்த எமோஷனல் வரவேயில்லையே? என கூறி நக்கலடித்தார். உடனே தர்ஷன் உள்ளிட்ட அங்கிருந்த அனைவரும் கவினை லுக் விட்டு சிரித்தனர். 
 
இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் அனைவரும் " இதைத்தான் அவன் வந்த நாளிலிருந்தே செய்துகொண்டிருக்கிறான். இப்போ என்ன புதுசா கேள்வியெல்லாம்..? என கூறி ட்ரோல் செய்து வருகின்றனர்.