செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : சனி, 21 செப்டம்பர் 2019 (16:02 IST)

கோமாளி படத்தை தொக்காக தூக்கிய போனி கபூர்!

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான கோமாளி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து. அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். 


 
16 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் ஜெயம் ரவி, தற்போது நவீன உலகில் ஏற்பட்ட மாற்றங்களை எப்படி ஏற்றுக் கொண்டு சமாளிக்கிறார் என்பதே கோமாளி  படத்தின் கதை. இந்த படம் 90ஸ் களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. 
 
தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்த இந்த படத்தின் ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார்.  இந்தி,  தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இது பற்றி கூறிய போனி கபூர் " கோமாளி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. படத்தை எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளார்.