செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 10 டிசம்பர் 2021 (18:20 IST)

கோலாகலமாக நடைபெற்ற ரஹ்மான் மகளின் திருமணம் - நேரில் சென்று வாழ்த்திய முதல்வர்!

தமிழ் சினிமாவில் 1986 காலகட்டத்தில் இருந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் ரஹ்மான். இவர் பில்லா 2, சிங்கம் 2 , 36 வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். 
 
தற்போது மணிரத்தினம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் சகலன். அதாவது ஏஆர் ரஹ்மான் மனைவியும் இவரது மனைவியும் சகோதரிகள் ஆவார். 
 
இந்நிலையில் நடிகர் ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர். இந்த வரவேற்பு விழாவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். மேலும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டார்.