சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்: நேரில் வாழ்த்திய முதல்வர்!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 6 ஜூலை 2021 (14:16 IST)

நடிகை சரண்யா பொன்வண்ணன் நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் சரண்யா நடித்துள்ளார். கோலிவுட்டின் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ள இவர் திரையில் ஹிரோக்களுக்கு அம்மாவாக மட்டுமின்றி சில குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
இவர் ஹீரோயினாக நடித்ததை விட குணசித்திர வேடங்களில் குறிப்பாக ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தது
தான் மார்க்கெட் உச்சத்தில் கொண்டு சேர்த்து. இந்நிலையில் தற்போது நேற்று (05-07-2021), சென்னை - மணப்பாக்கத்தில் நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் , துர்கா ஸ்டாலின், எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதில் மேலும் படிக்கவும் :