வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (11:04 IST)

ஜகமே தந்திரம் ஓடிடி ரிலிஸ்… தயாரிப்பாளரோடு கருத்து மோதலில் தனுஷ்!

நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவதில் தனுஷுக்கு விருப்பம் இல்லை என சொல்லப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படம் தயாராகி நீண்ட நாட்கள் ஆகியும் ரிலீஸாகாமல் இருந்தது. அதற்குக் காரணம் படத்தை எப்படியாவது திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டுமென படக்குழு நினைத்ததே என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படக்குழுவினர் படத்தை நெட்பிளிக்ஸில் டிஜிட்டர் ரைட்ஸ் மொத்தத்தையும் 45 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் மார்ச் மாதம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தயாரிப்பாளரின் இந்த முடிவுக்கு தனுஷுக்கு விருப்பமில்லை என்றும் அதனால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கருத்து மோதலால் தயாரிப்பாளர் சஷிகாந்த் சமூகவலைதளங்களில் தனுஷை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளாராம். தனுஷும் தனது அதிருப்தியை கர்ணன் படத்தின் தியேட்டர் ரிலீஸை அறிவித்துள்ள தாணுவுக்கு பாராட்டு தெரிவிக்கும் போது சசிகாந்தை தாக்குவது போல கருத்து தெரிவித்துள்ளார்.