செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (10:53 IST)

இயக்குனராகும் ராஜ்கிரணின் மகன்… அதுவும் அவர் படத்தின் இரண்டாம் பாகம்தானாம்!

நடிகர் ராஜ்கிரணின் மகன் அவர் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை அமைத்து இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த ராஜ்கிரண் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து 2000 வரை கதாநாயகனாக நடித்த அவர் பின்னர் நந்தா திரைப்படத்தின் மூலம் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். இப்போது வரை தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற பெயரை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவரின் முதல் படமான என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக முன்னர் அறிவித்திருந்தார். இப்போது அது குறித்த முக்கியமானத் தகவலை வெளியிட்டுள்ளார். அவருடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவதுபிறந்த நாள்...

"என் ராசாவின் மனசிலே"  இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்... அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்...’ எனத் தெரிவித்துள்ளார்.