‘அருவி’ அதிதி பாலனைக் கொண்டாடும் சினிமா ரசிகர்கள்
‘அருவி’ படத்தின் ஹீரோயின் அதிதி பாலனைப் படம் பார்த்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘அருவி’. பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலன் முதற்கொண்டு எல்லாருமே புதியவர்கள், ஓரிருவரைத் தவிர.
வித்தியாசமான கதைக்களம், புதுமையான திரை மொழி என எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது இந்தப் படம். இதில், முதன்மைக் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்த அதிதி பாலனையும், எல்லோரும் பாராட்டி வருகின்றனர். 500 பெண்களுக்கு ஆடிஷன் வைத்து, அதில் தேர்வானவர் அதிதி பாலன். இந்தப் பெண்ணுக்கு சிறந்த எதிர்காலம் சினிமாவில் இருப்பதாக சினிமா விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.