புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (16:16 IST)

அதிகப்படியான கெட்டவார்த்தை… புதிய சர்ச்சையை சந்தித்த சுருளி திரைப்படம்!

மலையாளத்தின் ட்ரெண்ட் செட்டிங் இயக்குனராக கடந்த சில ஆண்டுகளாக படங்களை உருவாக்கி வருபவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

லிஜோ இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு, ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பைப் பெற்றன. அதுமட்டுமில்லாமல் மலையாளத்தின் புதிய அலை இயக்குனர் என்ற பெயரையும் லிஜோவுக்கு பெற்றுத்தந்தன.
இந்நிலையில் அவர் டைம் லூப் பாணியில் உருவாக்கியுள்ள சுருளி என்ற திரைப்படம் சில தினங்களுக்கு முன்னர் சோனி லைவ் தளத்தில் வெளியானது. வழக்கம்போல பாராட்டுகளைக் குவித்துவரும் இந்த படத்தின் மீதான விமர்சனமாக அதிகளவில் கெட்டவார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மத்திய தணிக்கை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இப்போது ஓடிடியில் வெளியாகியிருக்கும் பிரதி தணிக்கை செய்யப்பட்ட பிரதி அல்ல என்று மத்திய தணிக்கை வாரியத்தின் திருவனந்தபுரம் மண்டல அலுவலர் வி.பார்வதி கூறியுள்ளார்.