திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (13:33 IST)

கிறிஸ்துமஸ்க்கு அணி வகுக்கும் படங்கள்! – திரையரங்குகள், ஓடிடி ரிலீஸ்!

இந்த ஆண்டு இறுதி மாதம் நெருங்கியுள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன.

கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு முதலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் ஆகஸ்டு முதலாக திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. முதலில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 100 சதவீத இருக்கைகளோடு திரையரங்குகள் செயல்பட தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதி மாதத்தை எட்டியுள்ள நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு பல்வேறு படங்கள் திரையரங்குகளிலும், ஓடிடியிலும் வெளியாக உள்ளன. அதன்படி திரையரங்குகளில் வெளியாக உள்ள தமிழ் படங்கள்

ராக்கி – டிசம்பர் 23
ரைட்டர் – டிசம்பர் 24
83 – டிசம்பர் 24
குருதி ஆட்டம் – டிசம்பர் 24
என்ன சொல்ல போகிறாய் – டிசம்பர் 24

இதுதவிர 24ம் தேதியில் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே (தமிழில் கலாட்டா கல்யாணம்) ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும், மின்னல் முரளி நெட்ப்ளிக்ஸிலும் வெளியாகிறது.