செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (15:45 IST)

லூசிபர் ரீமேக் காட்பாதர் படத்தைப் பார்த்த சிரஞ்சீவியின்… ரியாக்‌ஷன் என்ன?

லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

சமீபத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. படத்தில் பிருத்விராஜ் நடித்திருந்த வேடத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.. இதையடுத்து இப்போது முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர்கள் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்போது முழுப் படத்தையும் இயக்குனர் ராஜா சிரஞ்சீவிக்கு திரையிட்டுக் காட்டியுள்ளார். ஆனால் படத்தின் உருவாக்கத்தில் சிரஞ்சீவிக்கு முழு திருப்தி இல்லை என்று சொல்லப்படுகிறது.