வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (11:35 IST)

லியோ அதிகாலை காட்சி வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விஜய் நடித்த லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அரசுக்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் அதிகாலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு திரையிட தமிழக அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைக்கலாம் என்றும் அந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

இதனால் லியோ திரைப்படத்திற்கு 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்பதும் 9 மணி காட்சி தான் முதல் காட்சி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பட தயாரிப்பாளர் வேண்டுகோளை தமிழக அரசு ஏற்றால் 7 மணி காட்சி திரையிட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva