1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (07:49 IST)

விடுதலை 2 படத்துக்காக கெட்டப் மாற்றிய விஜய் சேதுபதி!

இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி நடைபெற்றது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக விஜய் சேதுபதி தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளாராம். இந்த கெட் அப்போடுதான் அவர் சமீபத்தில் இயக்குனர் அமீரின் கஃபே ஷாப் திறப்பு விழாவில் கலந்துகொண்டுள்ளார்.