1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (10:40 IST)

லியோ திரைப்படத்தின் அதிகாலை காட்சி விவகாரம்: அமைச்சர் ரகுபதி முக்கிய தகவல்..!

தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு மேல் தான் ஆரம்பமாக வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் அதிகாலை காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

இந்த வழக்கு இன்று காலை முதல் வழக்காக விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் அதிகாலை 4 மணி, 7 மணி காட்சிகள் திரையிடப்படுமா என்பது தெரியவரும்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரகுபதி லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என்றும் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே நீதிமன்றம் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்குமா அல்லது அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Mahendran