திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (08:52 IST)

சந்திரமுகி 2 படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்!

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. படத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி முதல் மைசூரில் தொடங்கி முடிந்தது.

முதல் பாகத்தின் வெற்றியில் வடிவேலுவின் முருகேசன் கதாபாத்திரத்துக்கு மிகப்பெரிய அளவில் பங்குண்டு. ரஜினியோடு இணைந்து அவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் அவரின் பேர் சொல்லும் ஒரு கதாபாத்திரமாக முருகேசன் கதாபாத்திரம் அமைந்தது.

இந்நிலையில் இப்போது உருவாகி வரும் இரண்டாம் பாகத்திலும் அவர் முருகேசன் என்ற அதே கதாபாத்திரத்தில்தான் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகம் முற்றிலும் வேறு கதை என்றாலும் முதல் பாகத்தில் இருந்து முருகேசன் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஐதராபாத்தில் இந்த படத்தின் இரண்டாம் கடட் ஷுட்டிங் தொடங்கியுள்ளது. விரைவில் படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.