தனுஷின் ‘’கர்ணன்’’ படத்திற்கு சென்சார் சான்றிதழ்...
நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் இன்று கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கர்ணன்.
இப்படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் கண்டா வரச்சொல்லுங்க, மஞ்சரத்தி புராணம், திரெளபதி முத்தம் ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலானது. பண்டாரத்திப் புராணம் பாடலுக்கு எதிரான விமர்சனங்கள் வலுக்கவே மஞ்சனத்திப் புராணம் என மாற்றப்பட்டது.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி கர்ணன் படம் ரிலீசாகவுள்ளதால் தனுஷின் டப்பிங் பணிகள் முடிந்திருந்தாலும் இன்னும் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் பாக்கியுள்ளதால் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கர்ணன் படத்திற்கு சென்சார் யூ/ஏ சான்றிழல் வழங்கியுள்ளதாக கர்ணன் பட இயக்குநர் மாரி செல்வராக் மற்றும் தயாரிப்பாளர் தாணு இருவரும் தெரிவித்துள்ளனர்.
இதனால் தனுஷ் பட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,. இது டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.