பிரபல ஹிந்தி நடிகைக்கு பெண் குழந்தை ... திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் வாழ்த்து!
பிரபல ஹிந்தி நடிகைக்கு பெண் குழந்தை ... திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் வாழ்த்து!
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய திரைப்பட நடிகையும், பிரபல மாடலமாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. இவர், குஷி, மிஸ்டர் ரோமியோ ஆகிய தென்னிந்திய தமிழ் திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு 2012 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ’வியான்’ என்று பெயரிட்டனர்.
இந்நிலையில், ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்தரா தம்பதியர்க்கு, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரபல ஹிந்தி நடிகைக்கு பெண் குழந்தை ... திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் வாழ்த்து!
இதுகுறித்து ‘ ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எங்கள் குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினரான ’சமீசா ஷெட்டி குந்த்ரா’வை பற்றி கூறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என தெரிவித்துள்ளார்.