திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (12:19 IST)

அதுல்யாவுடன் ஓவர் ரொமான்ஸ் செய்யும் கேப்மாரி ஜெய் - ப்ரோமோ வீடியோ!

நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குனருமாகிய SA சந்திரசேகர் கோலிவுட்டில் பல சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கொடி, டிராஃபிக் ராமசாமி போப்பிடற படங்களிலில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரமெடுத்துள்ள SA சந்திரசேகர் "கேப்மாரி " என்ற படத்தை இயக்கியுள்ளார். 
 
இப்படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதுல்யா, வைபவி  நடித்துள்ளனர். இரண்டு கதாநாயகிகளை வைத்து இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இது தான் தனது கடைசிப்படமாக இருக்கும் என்று எஸ்ஏசி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.  
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. இதில்  நடிகை அதுல்யா ரவியுடன் ஜெய் செய்யும் ரொமான்ஸ் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது. இந்த வீடியோவை நெட்டிசன்ஸ் விஜய் அண்ணாவுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்குறதே SAC தான் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.