ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 அக்டோபர் 2024 (17:18 IST)

டீசர்லயே இத்தனை படத்துல இருந்து காப்பியா? - சிரஞ்சீவியின் விஸ்வம்பரா டீசரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Vishwambhara

பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி நடிக்கும் விஸ்வம்பரா (Vishwambhara) படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ஹாலிவுட் படங்களில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

தெலுங்கில் பிரபல நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. தற்போது இவர் வசிஷ்டா என்பவர் எழுதி இயக்கியுள்ள ‘விஸ்வம்பரா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.

 

இந்த படத்தின் டீசர் இன்று வெளியான நிலையில் அதில் இடம்பெறும் காட்சிகள் எந்தெந்த ஹாலிவுட் படங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளனர். பிரபல ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸில் இடம்பெறும் டைட்டன் கிரகத்தின் தோற்றமும், இந்த படத்தில் காட்டப்படும் கிரகத்தின் தோற்றமும் ஒன்றாக உள்ளது.
 

 

இந்த பேண்டஸி உலகின் மக்கள் நீல நிற கண்களை கொண்டிருப்பது அவதார் திரைப்படத்தை நினைவுப்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர். மேலும் தீய சக்தியின் தோற்றம் குறித்த எரிக்கல் பறந்து வரும் காட்சி, மலையின் காட்சிகள், பனி மலையில் சிரஞ்சீவி சண்டை போடும் காட்சிகள் பிரபலமான லார்ட் ஆப் தி ரிங்ஸ், ரிங்ஸ் ஆப் பவர் படங்களில் இடம்பெற்ற காட்சிகளை நினைவுப்படுத்துவதாகவும் பலர் கூறுகின்றனர்.

 

முன்னதாக தெலுங்கில் பிரம்மாண்டமாக வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் ஹாலிவுட் படங்களான ஸ்டார் வார்ஸ், மேட் மேக்ஸ் போன்றவற்றின் காட்சியை அப்படியே கொண்டிருந்தது கிண்டலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K