வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 29 மே 2024 (14:29 IST)

அஜித்தின் முதல் படத்திற்கு நான் தான் உதவி செய்தேன்: சிரஞ்சீவி பகிர்ந்த தகவல்..!

அஜித் மற்றும் சிரஞ்சீவி சந்திப்பு நடந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள சிரஞ்சீவி அஜித்தின் முதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் தான் சிறப்பு விருந்தினராக வந்தேன் என்று தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ளார். 
 
அஜித் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பு தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்பதும் ’பிரேம புஸ்தகம்’ என்ற அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிரஞ்சீவி கலந்து கொண்டு அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பகிர்ந்து உள்ள சிரஞ்சீவி, அதனை அடுத்து அஜித்தின் மனைவி ஷாலினி தனது படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பதையும் பகிர்ந்து கொண்டார். 
 
மேலும் அஜித்தின் வளர்ச்சியை நான் பார்த்துக் கொண்டே வருகிறேன் என்றும் அவரது வளர்ச்சி அபரிதமானது என்றும் அவரது வளர்ச்சியை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவரிடம் பல விஷயங்கள் மனம் விட்டு பேசினேன் என்றும் அவரிடம் அரட்டை அடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றும் சிரஞ்சீவி அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 
 
மேலும் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது 
 
Edited by Siva