வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (17:40 IST)

பிரபல தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளர் மாரடைப்பால் திடீர் மரணம்

பிரபல இயக்குனர் ஹரி இயக்கிய கிட்டத்தட்ட அனைத்து படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பிரபல இயக்குனர் ப்ரியன் இன்று மதியம் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார்.




மறைந்த பாலுமகேந்திரா அவர்களின் உதவியாளரான ப்ரியன் கடந்த 1992ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனார். சேரன் இயக்கிய பொர்க்களம், தேசிய கீதம், வெற்றி கொடிகட்டு, ஹரி இயக்கிய சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 உள்பட பல திரைப்படங்களுக்கு ப்ரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இன்று இன்று மதியம் 3.30 மணிக்கு திடீரென ப்ரியனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக அவரது உறவினர்கள் தெரித்தனர். ப்ரியன் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்