செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (12:12 IST)

ஒரே நேரத்தில் 6 படங்களைத் தயாரிக்கும் சி.வி.குமார்

தயாரிப்பாளரான சி.வி.குமார், ஒரே நேரத்தில் 4 படங்களைத் தயாரித்து வருகிறார்.

 
திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் மூலம் ‘அட்டகத்தி’ படத்தைத் தயாரித்து தயாரிப்பாளரானவர் சி.வி.குமார். தொடர்ந்து ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘இறைவி’, ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களைத் தயாரித்து வருகிறார்.
 
ஜி.வி.பிரகாஷ், காயத்ரி சுரேஷ், சுரேஷ் மேனன், சதீஷ் நடிப்பில், வெங்கட் பக்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘4 ஜி’. கலையரசன், ‘கயல்’ ஆனந்தி, ஆஷ்னா ஜவேரி நடிப்பில், ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’. இவை தவிர, இன்னும் தலைப்பு வைக்கப்படாத 4 படங்களும் தயாரிப்புக்கான ஆயத்த நிலையில் இருக்கின்றன.