அடித்து நொறுக்கிய "புட்டபொம்மா" பாடல் - யூடியூபில் புதிய சாதனை!
சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்காக இருந்த, ”அலா வைகுந்தபுரமலோ” திரைப்படத்தில் இடம்பெற்ற ”புட்ட பொம்மா” யூடியூப் ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கி புதிய சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் - பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான 'அல வைக்குந்தாபுராமுலு' படத்தில் இடம்பெற்ற "புட்ட பொம்மா" மொழி தெரியாத மக்களும் விரும்பி கேட்கும் பாடலாக இருக்கிறது. தமன் இசையமைத்துள்ள இந்த பாடலின் டான்ஸ் ஸ்டெப் அனைவரையும் வெகுவாக ஈர்த்துவிட்டது. தெலுங்கு மொழியில் வெளியான இந்த பாடல் அணைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து டிக் டாக்கில் பிச்சிகிட்டு பறக்கிறது.
இந்நிலையில் தற்போது ”புட்ட பொம்மா” பாடல் யூடியூபில் 1 பில்லியன் பாரவையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைத்து ரசிகர்களை மனம் மகிழ வைத்துள்ளது.
Thanks to each & every music lover for making our scintillating audio such a big success. #AVPLMusic