1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 13 ஜனவரி 2021 (18:25 IST)

’’ பாக்ஸ் ஆபிஸ் ஹிட்... ஊரெல்லாம் விஜய், விஜய் சேதுபதி பேச்சுதான்’’ – சினிமா பிரபலம் டுவீட்

விஜய்யின் மாஸ்டர் படம் இந்த ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நிலையில் இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக ரிலீஸாகி ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் நூறு நாட்கள் தாண்டி ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் எனக் கூறி வருகின்றனர். இந்நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கபடி பாடல் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய் ,விஜய் சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 
இன்று வெளியாகி கோலிவுட், டோலிவிட், சாண்டல்வுட், பாலிவுட் என அத்தனை திரைத்துறையினரின் ஆதரவைப் பெற்று பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இப்படம் வசூல் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வத்தி கபடிபாடல் வெளியாகவுள்ளது எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து இப்படத்தின் வசன கர்த்தா ரத்னகுமார் தனது  டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், மாஸ்டர் படத்தில் பாக்ஸ் ஆபிஸ் அனைத்து இடங்களிலும் நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. தளபதி மற்றும் மக்கள் செல்வன் முகங்கள் மக்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது. லோக்ஜெகேஷ் என்னையும் இணைந்து ஹேட்டிரிக் வெற்றியில் சேர்த்ததற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.  இதற்கு லைக்குகள் குவிந்து  வருகிறது. Dir_Lokesh.
#MasterPongal #Master

 இன்று மாலை வாத்தி கபடி பாடலின் வீடியோ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.