வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (22:35 IST)

விட்டா கிறுக்கனாக்கிவிடுவாங்க போல: கேவலமான பிக்பாஸ் டாஸ்க்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக பேய் என்னும் கேவலமான டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்த நிலையில் இன்று புதியதாக வந்த சுஜாவை ஏமாற்ற சினேகனும், பிந்துமாதவியும் சண்டை போடுகின்றார்களாம்.



 
 
இந்த காட்சிகளின் புரமோவை பார்த்து உண்மையிலேயே சண்டை பிந்துவும், சினேகனும் சண்டை போடுகிறார்கள் என்று நினைத்த பார்வையாளர்களை கிறுக்கனாக மாற்றி, ஒரு கேவலமான நாடகத்தை நடத்தினர்.
 
இப்படியே போனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மங்களம் பாட வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை. சுஜா, ஹரிஷ் என துணை நடிகர்களை செலவில்லாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைத்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கிவிடலாம் என்று பிக்பாஸ் கனவு காணுவது வேஸ்ட் என்பதை வெகுவிரைவில் புரிந்து கொள்வார். ஓவியா, பரணி ஆகிய இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ வந்தால் மட்டுமே நிகழ்ச்சி களைகட்டும் இல்லையேல் நிகழ்ச்சிக்கு சங்குதான் என்று டுவிட்டர் பயனாளிகள் பதிவு செய்து வருகின்றனர்.