மணிரத்தினம் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்..!
மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த செக்க சிவந்த வானம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது .
செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமி , சிம்பு , விஜய் சேதுபதி அருண்விஜய் என பல முன்னனி கதாநாயகர்களை ஒன்று சேர்த்து , ஒரே கதையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்த பெருமை அவரையே சேரும் . இன்று பல இயக்குனர்கள் முயற்சி கூட செய்யாத அந்த தனித்திறைமைதான் அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது .
அந்த படத்திற்கு பிறகு தற்போது மணிரத்தினத்தின் நீண்ட நாள் ஆசையான "பொன்னியின் செல்வன்" நாவலை மையமாக கொண்டு இயக்கும் புதிய படத்தில் விக்ரம், சிம்பு ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது அவர்களை தொடர்ந்து , இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராயும் இப்படத்தில் கமிட் ஆக உள்ளனர் என்ற செய்தி நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வெளிவந்துள்ளது.
ஆகவே , இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் அதாவது , பொங்கல் பண்டிகைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய இருவர், இராவணன் ஆகிய இரண்டு வெற்றி படங்களில் ஏற்கனவே நடித்திருந்தார் புழப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களையும் தாண்டி பாலிவுட் சூப்பர் ஸ்டார் இணையும் இப்படம் நிச்சயமாக மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று வரலாற்றில் பேசப்படும் ஒரு சரித்திர படமாக அமையும் எனபதில் எந்த சந்தேகமும் இல்லை.