1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2019 (12:51 IST)

கமல் இல்லாமல் "இந்தியன் 2" குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா - வீடியோ!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர்,  ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 


 
ஷங்கர் இயக்கத்தில் 14வது படமாக உருவாகிவரும் இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரோடுக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கிடையில் படப்பிடிப்பு தலத்தில் இருந்து அடிக்கடி புகைப்படங்ககள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வந்தாலும் படக்குழுவினருக்கு இதுவே பெரிய பீதியாக இருந்து வருகிறது. 
 
இந்நிலையில் இப்படத்தில் நடத்து வரும் பாபி சிம்ஹா நேற்று தனது 36வது பிறந்த நாளை இந்தியன் 2 குழுவினருடன் கொண்டாடினார். அதில், ஷங்கர் , விவேக், ஸ்டென்ட் மாஸ்டர் பீட்டர் மற்றும் பலர் கலந்து கொள்ள கமல் மட்டும் மிஸ் ஆகியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக பாபிக்கு வாழ்த்துக்கள் குவிந்து  வருகிறது. இது குறித்து ட்விட்டரில் " வாழ்வில் இந்த பிறந்த நாள் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்' என்று பாபிசிம்ஹா தெரிவித்துள்ளார்.