1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 25 அக்டோபர் 2019 (12:44 IST)

பிகில் அட்ராசிட்டி: ரகளை செய்த ரசிகர்கள் 30 பேர் அதிரடி கைது!

விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த பிகில் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை பார்த்து பயங்கர குஷியில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளிவந்துள்ள பிகில் திரைப்படத்தில் அப்பா - மகன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளதால் , செண்டிமெண்ட் , காதல் , சண்டை , நண்பர்கள் பாசம் , லட்சியம் , கனவு என அத்தனை உணர்ச்சிகளையும் உள்ளடக்கி உருவகியுள்ள பிகில் நிச்சயம் ரசிகர்களை கவரும். 


 
இதற்கிடையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ரவுண்டானா பகுதியில் பிகில் சிறப்பு காட்சி வெளியிடுவதில் சற்று தாமதமானத்தில் விஜய் ரசிகர்கள் ரணகளம் செய்தனர். தியேட்டர் மற்றும் அருகில் இருந்த சில கடைகளை அடித்து நொறுக்கி கலவரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சற்றுமுன் இந்த கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேரை போலீசார் அதிரடி கைது செய்துள்ளனர். 
 
மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருக்கும் ரசிகர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பெருமையில்லாமல் இப்படி நடந்துகொள்கின்றனர். ரசிகர்களின் இந்த அளப்பறையால் விஜய்யே மனம் வருந்துவார்.  எனவே பிகில் அடிதடி ஏதுமின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என நெட்டிசன்ஸ் அறிவுரை கூறி வருகின்றனர்.