திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (20:23 IST)

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 தொடங்கும் தேதி அறிவிப்பு!

Biggboss
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 6 தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்து 6வது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன்னர் விஜய் டிவி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பதும், விரைவில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது