1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (09:12 IST)

பிக்பாஸிலிருந்து வெளியேறிய கையோடு பாலாஜி சந்தித்த முதல் நபர்

பிக்பாஸிலிருந்து வெளியேறிய கையோடு நடிகர் பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.
பிக்பாஸில் ஆரம்பம் முதலே பாலாஜிக்கு நல்ல ஆதரவு இருந்துவந்தது. அவர் கடைசி வரை இருந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே இருந்தது.
 
ஆனால் எவிக்சனில் பாலாஜி நேற்று வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கையோடு பாலாஜி, தனது வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதற்கும், திமுக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் பாலாஜி ஸ்டாலினை சந்தித்தார்.