1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 26 ஜூன் 2018 (21:47 IST)

மமதியை வெளிய போக சொல்லும் மகத்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த முறை நடிகர் மகத், மும்தாஜ், மமதி, ஜனனி ஐயர் உள்ளிட்ட 16 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.  
 
இன்றைய நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனேவே வெளியடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், பொன்னம்பலத்தின் பேச்சு தங்களுக்குப் பிடிக்கவில்லை என பெண் போட்டியாளர்கள் கூறுவது போல காட்சிகள் இடம்பெற்றது. இரண்டாவது வீடியோவில், நடிகர் செண்ட்ராயன் வைஷ்னவியிடம் ஆங்கிலம் கற்றுக் கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
 
இந்நிலையில், 3வது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், மும்தாஜும், மமதி சாரியும் முறை தவறுகிறது, டு மச் என்று கூறுகின்றனர். இதன்பின்னர் டேனியல் தப்பாக எடுத்துக்க வேண்டாம் இது டாஸ்க் என்று கூறுகிறார். இதற்கு மும்தாஜ் எந்த டாஸ்காக இருந்தாலும் சரி எனக்கு கம்ஃபோர்ட் இல்லையென்றால் செய்ய மாட்டேன் என கூறுகிறார். மமதியும் நாங்கள் சில விஷயம் செய்ய மாட்டோம் என்கிறார். இது குறித்து டேனியில் மகத்திடம் கூறும் போது மகத், சும்மா சும்மா மமதி, மும்தாஜை ஏத்தி விடுகிறார். அவரை வெளியே போக சொல்ல வேண்டும் எனக் கூறுகிறார்.