பிக்பாஸ் நிகழ்ச்சி; வெளியேற்றப்பட்ட ரம்யா வீடியோ வெளியீடு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒரு அணித்தலைவரை தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அணித்தலைவியாக இருந்த ரம்யா டாஸ்கிலிருந்து விலகியதால் எலிமினேஷனுக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் விஜய் டி.வி நடத்திய வாக்கெடுப்பில் யாஷிகாதான் வெளியேறப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். இது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில் பாடகி ரம்யா வெளியேற்றப்பட்டது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பாடகர் க்ரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உன்னுடைய சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறாய் ரம்யா. நியாயமாக இருந்தா சில நேரங்களில் தோற்று போகும். மீண்டும் நீ இல்லத்திற்கு திரும்புவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து சதீஷ் ட்விட்டரில் நான் ஐஸ்வர்யாவை நினைத்தேன். பிக்பாஸ் வீட்டில் ரம்யா புறம் பேசவில்லை. எதிர்மறையாகவும் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், கோபப்படக்கூடாது, மற்றவர்களைப் பற்றி புறம் பேசக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இரண்டு, மூன்று இடங்களில் கோபப்பட்டுள்ளேன். நான் வெளியே வந்ததற்காக பலர் வருத்தப்படுகிறீர்கள். பிக்பாஸ் நிறைய சண்டைகள் நடக்கும். அதில் நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம் மட்டும் தான். நான் வெளியேறியதற்காக நீங்கள் அனைவரும் சந்தோஷம் தான் அடைய வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
Thank you so much everybody for all the love and support. I am completely overwhelmed. Love you all! ❤️ pic.twitter.com/0GWBPqGiFp