செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (16:00 IST)

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே... ரித்விகாவை பார்த்து வியக்கும் ரசிகர்கள்!

தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது. சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். 
 
அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் பிக் பாஸ் இரண்டாவது சீசனில்  பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பக்கா தமிழ் பெண்ணாக இருந்த இவர் பின்னர் கொஞ்சம் மாடர்ன் பெண்ணாக மாற முயற்சித்து இணையவாசிகள் விமர்சனத்திற்கு ஆளானார். 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சுடிதாரில் ஹோம்லி பெண்ணாக தமிழ் பெண் முகஜாடையில் ஓவர் மேக்கப் ஏதும் போடாமல் சிம்பிளாக போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். லட்சணமான இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட் செய்துள்ளனர்.