1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (16:55 IST)

நான் போராடிய அதே மெரினா பீச்சில் என் மூஞ்சில காரி துப்புனாங்க - ஜூலி கண்ணீர்!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி , பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார் ஜுலி. பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார் ஜூலி.
 
இதுவரை பிக்பாஸ் நாலு சீசன் முடிந்தும் ஜூலியை கிண்டல் செய்வதை நெட்டிசன்ஸ் நிறுத்தவில்லை. இருந்தும் தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார். அந்தவகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி தான் கடந்து வந்த கசப்பான அனுபவங்களை குறித்து பேசினார். 
 
அப்போது ஜல்லிக்கட்டுக்காக மெரினா பீச்சில் நான் இருந்தபோது நிறைய பேர் எனக்கு தண்ணி கொடுத்தாங்க ஆனால் பிக்பாஸுக்கு சென்று வந்ததற்கு பிறகு அதே மெரினா பீச்சில் வந்ததற்கு என்  முகத்தில் காரி துப்புனாங்க. அந்த அளவிற்கு நான் பல மோசமான அவமானங்களை சந்தித்துள்ளேன் என்று கண்ணீர் விட்டு பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது.