1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2017 (17:01 IST)

பிக்பாஸ் வீட்டில் உண்மையாக உள்ள இருவர் இவர்கள்தான்: காஜல் பசுபதி

பிக்பாஸ் வீட்டில் அதிரடியாய் மூன்று பிரபலங்கள், மூன்று நாட்களில் உள்ளே நுழைந்தனர். அதில் ஒருவர் காஜல் பசுபதி.  பிக்பாஸ் வீட்டை விட்டு 16 நாட்களுக்கு பிறகு நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட காஜல், அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

 
சிநேகனை மக்களுக்கு பிடித்தாலும் நான் அவரை வெறுக்கிறேன் என்றும், அதற்கான ஒரு முக்கிய ரகசியத்தை பிக்பாஸ்  நிகழ்ச்சி முடிந்த பிறகு கூறுகிறேன் என தெரிவித்திருந்தார்.
 
சமீபத்தில் பேட்டி ஒன்றில், பொய்யான நபர்களுடன் நான் 16 நாட்கள் தாக்குபிடித்தது ஆச்சரியம். கணேஷ் மற்றும் ஆரவ்வை  தவிர அங்கு இருப்பவர்கள் அனைவரும் பொய்யாக நடிக்கின்றனர், கணேஷ் மிகவும் உண்மையாக இருக்கிறார், ஆரவ் என்னுடைய நல்ல நண்பர்.
 
ரைசா வெளியேறியதும் நான் ஆரவ்விடம் பேசுவதை குறைத்துக் கொண்டேன். ஏனெனில், என்னால் அவர் வெளியே போக  கூடாது என்று நினைத்தேன் என்று கூறியுள்ளார்.