ஆரி கிட்ட வச்சுக்காதே.... நாமினேட் ஆன 6 முக்கியஸ்தர்கள் - வெளியேறப்போவது நிஷா?
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று எவிக்ஷனில் சுசித்ரா வெளியேறினார். சுச்சி வீட்டில் இருந்து வெளியேறியதும் கமலிடம் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் பற்றியும் அவர்களது நடத்தை பற்றியும் கூறிய அத்தனையும் சரி என மக்களுக்கே புரிய வைத்தார்.
சுச்சியின் ஆதரவாளர் இல்லை என்றாலும், நேற்று அவர் போட்டியாளர்களைப் பற்றி அவர் கூறியது சரிதான் என ஆளாளுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். சுசித்ராவை அடுத்து இந்த வாரம் வீட்டை விட்டு நிஷா வெளியேறவேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சோம் , பாலா ,ஆரி , ரமேஷ், அனிதா, சனம் , நிஷா உள்ளிட்ட மொத்தம் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் நிஷா இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம், நிஷாவுக்கு பாசிடிவ் கமெண்ட் கூட வரவில்லை. அப்படியிருந்தும் இந்த வாரம் நிஷா சேவ் ஆனால் அது விஜய் டீவி பண்ணுற சதி வேலையா தான் இருக்கும் என்பது உறுதி...