பாலாஜிக்கு பல்ப் கொடுத்த பிக்பாஸ் - இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு!!
பிக்பாஸ் வீட்டில் நேற்று பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் முறையாக செய்யாததால் பிக்பாஸ் வார்னிங் கொடுத்து ஜீரோ பட்ஜெட் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதில் பாட்டியை அதிகமாக சந்தோஷப்படுத்தவேண்டும் என்ற ரூல்ஸை புரிந்துக்கொள்ளாமல் தவறான முறையில் செய்து டாஸ்கை சரியாக முடிக்கவில்லை.
உடனே பாலா அந்த லாக்கரில் இருந்து நான் எடுக்கவில்லை என தெனாவட்டாக பதில் சொல்ல உடனே பிக்பாஸ் இந்த டாஸ்கை சரியாக செய்ய தவறிட்டீங்க முதலில் ஒழுங்கா புரிஞ்சிருக்கோங்க என செம பல்ப் கொடுத்துவிட்டார். வாய் கிழிய பேசினால் இன்னும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்... ஆடிய ஆட்டம் என்ன ... கடவுள் இருக்கான் குமாரு
பிக்பாஸ் வீட்டில் வர வர பாலாவின் நடவடிக்கைகள் யாருக்கும் பிடிக்கவில்லை முதலில் அர்ச்சனா,ரியோ, நிஷா எல்லாம் குரூப்பிஷம்னு சொல்லிவிட்டு பாலா மட்டும் ஒரு பெரிய குரூப் வச்சி ஒட்டுமொத்த மொத்த போட்டியாளர்களை காலி பண்ணிட்டு இருக்கிறார். அர்ச்சனா, சனம் நேற்று அவ்வளோவ் சொல்லியும் திருடனை புடிக்கிறேன் என பெரிய டான் மாதிரி சுத்திடே இருந்தாரு. அதுக்கு தான் பிக்பாஸ் பெரிய ஆப்பு வச்சுட்டாரு. வர வர பாலாவுக்கு ரியோ ,அர்ச்சனா எல்லாம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது.
ரீயோ குழுவை எதிர்த்து பேசியதும் அன்று பாலாவை புகழ்ந்தவர்கள் எல்லாரும் இன்று பாலாவின் உண்மை முகத்தை அறிந்து திட்டும் நிலைக்கு வந்திருக்கிரார்கள். அடுத்து என்னப்பா பாலாவை ஜெயில்ல தூக்கி போட வேண்டியது தானே.. பாலா எல்லா சீசனிலும் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய சகாப்தம். என்றைக்கும் ஜிகிர்தண்டா சேதுவாக வலம் வந்தாலும் கடைசியில் நீ ஒரு கோமாளி.