இந்தா கோர்த்து விட்டுட்டாங்க.... காதல் வெட்கத்தில் ரம்யா பாண்டியன்!
பிக்பாஸ் வீட்டில் காதலுக்கென்றே தனி மவுஸ் உள்ளது. மற்ற டாஸ்க்களை விட காதலித்து பிரபலமான போட்டியாளர்கள் ஒவ்வொரு சீசனிலும் உண்டு. அந்தவகையில் ஷிவானி மற்றும் பாலாஜிக்கு இடையில் காதல் கோர்த்து விட்டனர்.
தற்ப்போது " பாட்டி சொல்லை தட்டாதே" டாஸ்க்கில் ரம்யா பாண்டியன் மற்றும் சோம் கணவன் மனைவியாகவும் அவர்களுக்கு பிறந்த மகளாக கேபிரில்லா நடிக்கிறார். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து பாட்டி அர்ச்சனாவின் சொத்தை திருடுகின்றனர்.
இப்படியே டாஸ்க் டாஸ்க் என்று சொல்லி சும்மா இருந்த சோம் மனதில் ஆசையை வளர்த்துவிட்டு அலையவிடப்போறாங்க. இந்த டாஸ்க்கில் ரம்யா சோமுக்கு இடையில் சின்ன சின்ன ரொமான்டிக்கான விஷயங்களை பார்க்கலாம். பாட்டி அர்ச்சனாவுக்கு பதில் சுசித்ராவை போட்டிருக்கலாம். பத்து பொருத்தமும் பக்காவா இருந்திருக்கும் என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகின்றனர்.