1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (13:00 IST)

சக்களத்தி சண்டை ஆரம்பிச்சிட்டாங்க... ஷிவானியை வெளுத்து வாங்கிய கேபி!

பிக்பாஸ் வீட்டில் இன்று கேபிரில்லாவுக்கும் பாலாவுக்கு இடையே சண்டை வெடித்துள்ளது. இதில் தோழி ஷிவானி வந்து கேபிரில்லாவை எதிர்த்து பிரச்சனையை மண்டைக்குள் வாரி போட்டுக்கொண்டார். முதன்முறையாக இரண்டு பெண்களுக்குள் சண்டை வந்துள்ளதால் நிகழ்ச்சி புதிய ஸ்வாரஸ்யத்தை தூண்டியுள்ளது.

ஆனால், ஆடியன்ஸ் "ஷிவானி நீ எதுக்கு புதுசா பேசற..? நீ பாலா பின்னால சுத்துற வேலைய மட்டும் பாரு பாலாக்கு பல் விலக்கி விடும் வேலை,  மசாஜ் பண்ணும் வேலை, பாலாவின் டவுசர் பிடித்துக்கொண்டு பின்னாலே நடந்து கொண்டே இரு.  பிக்பாஸ் உனக்கு இந்த வேலை மட்டும் தான் தந்திருக்கிறார் என கிண்டலடித்துள்ளனர்.

இன்று முதல் ப்ரோமோ மொக்கையாக இருந்ததை வைத்து நிகழ்ச்சி ஸ்வாரஸ்யமில்லை என கூறிய மக்களே இரண்டாவது ப்ரோமோவை பார்த்து குஷி  ஆகிவிட்டனர். டோலிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த சண்டையில் பாலா யார் பக்கம் போவது என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.  பாலாவின் அடுத்த நகர்வு என்ன என்று இந்த சக்களத்தி சண்டையிலே தெரிந்துவிடும்.