1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (16:15 IST)

கக்கூஸ் குரூப் கதறல் இனிதே ஆரம்பம் - தலைவரான தன்மானத்தலைவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் இந்த வார தலைவர் பதவிக்காக போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர். 


 
இந்த வார தலைவர் பதவிக்காக மதுமிதா , ஷெரின் , முகன் உள்ளிட்டோர்  போட்டியிடுகின்றனர். இதற்காக பிக் பாஸ் ஒரு இன்டரெஸ்டிங் டாஸ்க் கொடுக்கிறார். அப்போது மதுவுக்கு ஆதரவாக சேரனும் , முகனுக்கு ஆதரவாக லொஸ்லியா , கவின் , தர்ஷன் , சாண்டி உள்ளிட்டோரும், ஷெரினுக்கு ஆதரவாக அபிராமியும் சியர் அப் செய்கின்றனர். டாஸ்க்கை வேகமாக முடித்து மதுமிதா வெற்றி பெற்றுவிட்டார். எனவே இந்த வார தலைவராக மதுமிதா தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். 
 
இதனால் மதுமிதா எவிக்ஷனில் இருந்து தப்பித்து தன்னை வெறுப்பேற்றியவர்களை இந்த வாரம் முழுக்க வச்சு செய்வார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மது வெற்றிபெற்ற வெறியோடு கத்தும் போது லொஸ்லியாவின் முகத்தை பார்க்கணுமே ...அடடடா ...என்ன ஒரு கடுப்பு.
 
வீட்டிலிருக்கும் ஆண்களை தனியாளாக எதிர்நின்று சமாளித்து வந்த மதுமிதா தலைவர் ஆனதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தாலும் ஒரு சிலரோ மதுவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.