செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 27 ஜூலை 2018 (12:36 IST)

சாப்பாடு கிடைக்காமபோன கூட பரவாயில்ல... கடுப்பான மும்தாஜ்

சுவாரஸ்யத்தை கூட்ட பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஏற்ப போட்டிகள் கொடுக்கப்படுகின்றன. பிக்பாஸ் 1 நிகழ்ச்சியினை பார்த்துவிட்டு வந்தவர்கள் என்பதால்இப்போதைய போட்டியாளர்கள் நடிப்பதாக புகார் எழுந்தது.இதனால் அவர்களது சுயத்தை வெளிக்கொண்டுவர போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால் தற்போது பிக்பாஸ் சுவராஸ்யமாக மாறிவருகிறது. நேற்று நடந்த போட்டியில் தெரிந்திருக்கும் ஒவ்வொருவரின் மனநிலை எப்படி இருக்கிறது என்று. இன்று ஒரு புதிய புரொமோ வந்துள்ளது.



அதில் பொன்னம்பலம் யாரை பற்றியோ பின்னால் பேச, மும்தாஜ் நான் சாப்பாடு இல்லாமல் இருப்பேன், ஆனால் பொய் சொல்ல மாட்டேன் என்று யாஷிகாவிடம் கூறுகிறார். வீட்டில் யார் பொய் கூறினார்கள், பொன்னம்பலம் மும்தாஜை தான் பின்னால் பேசுகிறாரா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.