புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (17:17 IST)

''பிக்பாஸ் வெற்றியாளர் ''ஆரி பதிவிட்ட டுவிட்....ரசிகர்கள் நெகிழ்ச்சி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  பிக்பாஸ் சீசன் -4 நிகழ்ச்ச்சி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இக்கொரோனா காலத்தில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தது.

பல நாட்கள் தொடர்ந்த இந்நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் சுமார் 11 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று நடிகர் ஆரி தேர் வு செய்யப்பட்டு ரூ.50 லட்சத்திற்கான காசோலையும் பெற்றார்.

தற்போது இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் பதிவிட்டுள்ள ஆரி, எல்லா புகழும் எனக்கு வாக்களித்த உங்களுக்கே எனத் தெரிவித்துள்ளார்.