ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (18:14 IST)

ரஜினி மட்டும் அரசியலுக்கு வரட்டும்... மிரட்டி விட்ட பாரதிராஜா!

ரஜினி மட்டும் அரசியலுக்கு வந்தால் நான் அவருக்கு எதிரியாக இருப்பேன் என பாரதிராஜா தெரிவித்துள்ளார். 
 
தமிழ்த் திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கலைஞானத்துக்கு, பாரதிராஜா தலைமையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டார். இந்த விழாவில் பாரதிராஜா ரஜினி குறித்து பேசினார். 
 
பாரதிராஜா கூறியதாவது, ரஜினி ஒரு குழந்தை குணம் கொண்டவர். நான் அவரை பல முறை காயப்படுத்தியிருக்கிறேன். அதை ஒரு பொருட்டாக ரஜினி கருதியதில்லை. பலமுறை கீறியிருக்கிறேன், கோபத்தில் வார்த்தைகள் விட்டிருக்கிறேன் ஆனால் நேரில் பார்க்கும் போது அதெல்லாம் விடுங்க சார் என குழந்தை போல் கூறுவார். 
கெட்டது எதையும் மனதில் ஏற்றிக் கொள்ள மாட்டார். அவருக்கு உலகம் திரும்பிப் பர்க்கும்படி ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டுமென கேட்டேன் ஆனால் மறுத்து விட்டார். எப்படியும் ஒருநாள் நடத்தி விடுவேன். 
 
அதை ரஜினி அரசியலுக்கு வருமுன் அதை நடத்திவிட வேண்டும். ஏனென்றால் அவர் அரசியலுக்கு வந்து விட்டால நாங்கள் எதிரெதிராக நிற்போம். அதனால் அவர் அரசியலுக்கு வருமுன் அவருக்கு பாரட்டு விழா நடத்த வேண்டும் என பேசினார்.