திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 ஆகஸ்ட் 2020 (17:50 IST)

உடலை வருத்தி உச்சம் தொட்ட உலகநாயகன் – கமலுக்கு பாரதிராஜா வாழ்த்து!

நடிகர் கமல் சினிமாவில் அறிமுகமாகி 61 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அவரது நண்பரும் இயக்குனருமான பாரதிராஜா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமல் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா படத்தில் அறிமுகமாகி 61 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சாதனையைப் பாராட்டும் விதமாக அவரது கலையுலக சேவையை பாராட்டும் பொருட்டு சக கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து கமலின் நீண்டகால நண்பரும் இயக்குனருமான பாரதிராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இந்தியத் திரை உலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து பல்வேறு தொழில் நுட்பங்கள், பல நூறு கதாபாத்திரங்கள், உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன் என் கமலுக்கு வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.