செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (10:33 IST)

கமலின் சத்யா பாடலை திரும்ப உருவாக்கிய இயக்குனர் – நெகிழ்ந்து போன கமல்!

நடிகர் கமல்ஹாசனின் சத்யா பட பாடலை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் சிம்பா இயக்குனர் அரவிந்த்.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் அமலா நடிப்பில் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சத்யா. இந்த படத்தை பாட்ஷா புகழ் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற வளையோசை மற்றும் போட்டா படியுது போன்ற பாடல்கள் மிகவும் பிரபலம். இதில் போட்டா படியுது பாடல் கமல் தனது நண்பர்களுடன் சென்னையின் பல இடங்களில் ஆடிப் பாடுவது போன்று காட்சியாக்கப்பட்டு இருக்கும்.

இந்த பாடலை சிம்பா என்ற படத்தின் இயக்குனர் அரவிந்த் வேறு நடிகர்களை வைத்து ஏறக்குறைய அதே போன்ற இடங்களில் மீண்டும் படமாக்கி இருந்தார். இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ’61years of kamalism’ எனக் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த கமல் ‘நிபந்தனையில்லாத இந்த அன்புக்கு நானும் நிபந்தனையில்லாத அன்பையே அளிக்க முடியும்’ என நெகிழ்ந்து கூறியுள்ளார்.