செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (19:00 IST)

ஜஸ்ட் மிஸ்ஸு… இல்லன்னா பாரதிராஜா இயக்கத்தில் நடிச்சிருப்பேன் – புலம்பும் பிரியாணி கடை ஓனர்!

சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையின் ஓனர் தமிழ்ச்செல்வன் தான் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு பறிபோனது பற்றிக் கவலைப்பட்டுள்ளார்.

பாரதிராஜாவிடம் ஒரு கல்லைக் கொடுத்தால்கூட அதை நடிக்க வைத்துவிடுவார் என்று சொல்லுமளவுக்கு ஏராளமான புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களை உச்ச நட்சத்திரம் ஆக்கி உள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் அவர் சேலம் ஆர் ஆர் பிரியாணி கடை ஓனர் தமிழ் செல்வனை வைத்து ஒரு படம் இயக்க இருந்துள்ளார்.

ஆனால் சில பல காரணங்களால் அது கைவிட்டுப் போயுள்ளது. இது சம்மந்தமாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள தமிழ்ச்செல்வன் வரும் காலத்தில் அந்த வாய்ப்பு நிறைவேறும் என்ற ஆசையோடு உள்ளதாக சொல்லப்படுகிறது.