ஞாயிறு, 14 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2020 (17:26 IST)

அவர் டெல்லி அணியின் சொத்து – பிரையன் லாரா வாயால் பாரட்டப்பட்ட இளம் நடிகர்!

அவர் டெல்லி அணியின் சொத்து – பிரையன் லாரா வாயால் பாரட்டப்பட்ட இளம் நடிகர்!
டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள ரிஷப் பண்ட் மிகப்பெரிய உயரங்களை தொடுவார் என ஜாம்பவான் பேட்ஸ்மேன் லாரா பாராட்டியுள்ளார்.

இந்திய அணிக்கு ஐபிஎல் மூலமாகக் கிடைத்த ஒரு மிகச்சிறந்த ஒரு வீரராக ரிஷப் பண்ட் கிடைத்தார். டெல்லி அணிக்காக விளையாடிய அவர் தனது அதிரடி பேட்டிங்கால் இந்திய அணியில் இடம்பிடித்து உலகக்கோப்பை தொடரிலும் விளையாடினார். இந்நிலையில் இந்த ஆண்டும் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
அவர் டெல்லி அணியின் சொத்து – பிரையன் லாரா வாயால் பாரட்டப்பட்ட இளம் நடிகர்!


இந்நிலையில் அவரின் பேட்டிங் பற்றி கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா ‘டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரிஷப் பந்த ஒரு மிகப்பெரிய சொத்து. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அவர் தனது பேட்டிங் திறனை மிகவும் மேம்படுத்தியுள்ளார். அவரால் மைதானத்தின் எந்த பகுதியிலும் ரன்கள் சேர்க்க முடிகிறது. அது பந்து வீச்சாளர்களுக்கு அதிக கவலையை ஏற்படுத்துகிறது. அவர் மிகப்பெரிய உயரங்களை தொடுவார்’ எனக் கூறியுள்ளார்.