வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (10:46 IST)

பாக்கியராஜ் வீட்டில் நடந்த துக்கம் – குடும்ப உறுப்பினர் மரணம்!

தமிழ் சினிமாவின் முன்னாணி இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜின் மாமியார் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜின் முதல் மனைவி பிரவீனா மறைந்ததை அடுத்து, தன்னோடு டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்திருந்த பூர்ணிமாவைத் திருமணம் செய்துகொண்டார் பாக்யராஜ். இவர்களுக்கு சாந்தனு என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் பாக்யராஜ் குடும்பத்தின் மூத்த உறுப்பினரான பூர்ணிமாவின் தாயார் சுப்பலட்சுமி நேற்று உடல் நலக் குறைவுக் காரணமாக மறைந்துள்ளார். இதையடுத்து அவரது இறுதி சடங்கு இன்று நடக்க உள்ளது.