வெள்ள நீரில் மிதப்பது பீஸ்ட் பட செட்டா? வைரலான புகைப்படம்!
சென்னையில் கடந்தவாரம் கனமழை பெய்ததால் நகர் முழுவதும் வெள்ள நீர் வடியாமல் தண்ணீர் தேங்கி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் சில பாடல்களும் காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளது. இந்நிலையில் படத்தை விரைவாக முடிக்கும் முயற்சியில் படக்குழு சென்னையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட்டில் படப்பிடிப்பை நடத்தி வந்தது.
ஆனால் சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையில் நகரம் முழுவதும் தண்ணீர்க்காடாக மாறியது. இந்த கனமழையால் பீஸ்ட் படத்தின் ஷாப்பிங் மால் செட்டையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இது சம்மந்தமான படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மழை நீர் சுழந்தாலும் செட்டுக்கு பாதிப்பில்லை என்றும், விரைவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு ஷூட்டிங் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது.