ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 13 ஜூலை 2018 (12:02 IST)

உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட பேய் படத்தில் மொட்டை ராஜேந்திரன்

தமிழ் திரைப்பட நடிகர்கள் வெவ்வேறு குணசித்திர வேடங்களில் நடித்த பின்னரே நடிகர்களாய் நடிக்க தொடங்கினர். அந்த வரிசையில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் முதலில் ஸ்டண்ட் நடிகராகவும் பின்னர் சிறு சிறு காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
நான் கடவுள் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான மொட்டை ராஜேந்திரன், பிறகு பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் காமெடிக்கு மாறினார். அதனை  தொடர்ந்து பேய் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் தருண் பிரபு இயக்கும் ‘கருப்பு காக்கா’ படத்தை வசந்த் மற்றும் பிரகாஷ் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார்.  இது காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் பேய் படம். பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுதச் சென்ற ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் மொட்டை ராஜேந்திரன் படம் முழுவதும் வருகிறார். இவருடன் டேனியல், ராட்டினம் சுவாதி, ஜார்ஜ்,  அஞ்சலி ராவ் உள்பட பலர் நடிக்கிறார்கள். 
 
இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் எஸ்.டி. விஜய்மில்டன் நேற்று வெளியிட்டுள்ளார்.